பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டாலே பலரும் தமது கருத்துக்களை கூறுவதற்கு தயங்க மாட்டார்கள். அதன்படி பிக் பாஸ் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் வைத்து சமூக வலைதள பக்கங்களில் சர்ச்சை மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகின்றன.
இந்த நிலையில், இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பிக் பாஸ் சீசன் 8ன் இரண்டாவது நாள் எபிசோட் குறித்து பேசி உள்ளார். அதன்படி இவர் பெண்களைப் பற்றி பேசியது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
அந்த வகையில் அவர் கூறுகையில், குறித்த எபிசோட் மிக தெளிவாக கூறுவதோடு ஒரு விஷயத்தை மிகவும் ஆழமாக விவாதிக்கவும் வைத்துள்ளது. பிக் பாஸ் கூறியதைப் போலவே ஆண்கள் அணியில் இருந்து ஒருவரும் பெண்கள் அணியில் இருந்து ஒருவரும் மாறி மாறி குறித்த அணிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் இதில் ஆண்கள் எந்தவித சண்டையும் இல்லாமல் யாரையும் காயப்படுத்தாமல் முத்துக்குமரனை தேர்வு செய்தார்கள்.
அதே சமயம் பெண்கள் அணியில் இருந்து ஒருவரை தேர்வு செய்வதற்கு விவாதம் நடந்தது, வாக்கெடுப்பு நடந்தது, பழைய பகை உள்ளே வந்தது போல கோபத்தில் சண்டை போட்டு அழுகின்றார்கள். இதனைப் பார்த்தால் பெண்களுக்கே பெண்கள் அணி மீது கோபம் வரும்.
பெண்களிடம் ஒரு பொறுப்பு கொடுக்கப்படும் போது அதை எப்படி அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும் ஆண்களிடம் அதே பொறுப்பை கொடுத்தால் அவர்கள் எப்படி அணுகிறார்கள் என்பதற்கும் இந்த நிகழ்வு தான் எடுத்துக்காட்டு. பன்னாட்டு நிறுவனங்களில் ஒரு பொறுப்பினை பெண்களுக்கும் ஆண்களுக்கும் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதனை அந்த எபிசோட் பலருக்கும் பாடம் கற்றுக் கொடுத்திருக்கும்.
மேலும், காய்கறிகளை வாங்கும் போது தெரியாத்தனமாக இரண்டு பாக்கெட் உப்பினை பெண்கள் எடுத்து வந்து விட்டார்கள். ஆனால் ஆண்களிடம் அது இல்லாததால் அவர்களிடம் தண்ணீர் பிடித்துக் கொள்ள 106 நாட்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்க வைக்கின்றனர்.
அதற்கு ஆண்களும் ஓகே சொல்ல, உப்பை கொடுக்கின்றார்கள். நான் பெண்களை மக்கு எனக் கூற காரணம், ஆண்கள் சரி என கூறியதை எந்த அடிப்படையில் ஒத்துக் கொண்டார்கள் அதுதான் எனக்கு மக்கு தனமாக தெரிகின்றது என்று கூறியுள்ளார்.
Listen News!