• Jan 19 2025

அமரன் படமும் காப்பியா? அமெரிக்க ஆதாரத்துடன் வறுத்தெடுக்கும் இணையவாசிகள்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிய அமரர் திரைப்படம் சக்கைப்  போடு போட்டு வருகின்றது. தற்போது 250 கோடிகளை வசூலித்துள்ள அமரன் திரைப்படம் கூடிய விரைவில் 300 கோடிகளை வசூலிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நாட்டுக்காக போரிட்டு வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்தனின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் கேரக்டரில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

d_i_a

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் இன்றளவும் மட்டும் ஒளிபரப்பாகி வருகின்றது. கங்குவா திரைப்படம் வெளியான போதிலும் அமரன் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு இன்னும் குறையவில்லை. 


இந்த நிலையில், அமரன் திரைப்படம் அமெரிக்க ராணுவத்தில் இடம்பெற்ற கதை ஒன்றின் காப்பியாக எடுக்கப்பட்டுள்ளது என இணைய வாசிகள் ட்ரோல் பண்ணி வருகின்றார்கள். தற்போது இந்த படமும் காப்பியா என கேள்வி எழுந்துள்ளது.

அதாவது, அமெரிக்க ராணுவத்தில் இருக்கும் தனது கணவருடன் அவருடைய மனைவியை பேசிக்கொண்டு இருப்பார். அதன் போது எதிரிகள் அவர்களை நோக்கி சரமாரியாக சுடுவார்கள். அப்போது அவருடைய மனைவி மிகவும் பயப்படுவார். இதுபோன்ற காட்சி அமரன் படத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் நல்லா இருக்குப்பா அமரன் வியாபாரம் என்று இரண்டு படத்தின் காட்சிகளையும் பகிர்ந்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement