• Dec 06 2024

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸை ரொம்ப ஸ்டிக்காக வார்னிங் பண்ணிய விஜய் சேதுபதி! ரசிகர்கள் அதிருப்தி

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு 40 நாட்களைக்  கடந்து உள்ளது. ஆனாலும் பிக் பாஸ் வீட்டில் உள்ள  போட்டியாளர்கள் சரியான கண்டெண்ட் கொடுக்கவில்லை என  ரசிகர்கள் வெறுப்பைக் கொட்டித்  தீர்த்து வருகின்றனர்.

இந்த சீசன் ஆரம்பிக்கப்பட்டு மந்தமான நிலையில் சென்று கொண்டு இருப்பதால் ஆட்டம்  சூடு பிடிக்க வேண்டும் என்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வைல்ட் கார்ட்  போட்டியாளர்களை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்கள்.

d_i_a

அதன்படி ராணவ், ரயான், ரியா, வர்ஷினி வெங்கட், மஞ்சரி, ஷிவக்குமார் ஆகிய 6 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே சென்றனர். இவர்கள் வந்த பிறகாவது ஆட்டம் களைகட்டும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை  பேச விடாமல் தரமான சம்பவம் செய்துள்ளார். 

அதாவது கடந்த வாரம் வீட்டில் நடைபெற்ற குளறுபடிகளை காரணமாக கொண்டு சௌந்தர்யா, ராணாவை கேள்வி கேட்க எழுப்பிய விஜய் சேதுபதி பதில் சொல்ல விடாமல் மீண்டும் அமர வைக்கிறார். மேலேயும் இது போல செய்தால் இப்படி தான் நடக்கும் என வார்னிங்க் பண்ணுகிறார். ஆனாலும் இந்த ப்ரோமோவில் ஒன்றுமே புரியவில்லை என ரசிகர்கள் அதிருப்தி வெளியிட்டு உள்ளார்கள்.


Advertisement

Advertisement