• Apr 26 2024

புஷ்பா 2 படத்தின் புதிய லுக்கில் தனது மனைவியுடன் நிற்கும் அல்லு அர்ஜுன்- ப்பா எவ்ளோ கரடுமுரடா இருக்காரு!

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாd திரைப்படம் தான் புஷ்பா. இந்தப் படத்தில் இவருடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தப்படம் சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களை மட்டுமில்லாமல் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிலும் அள்ளிக் குவித்தது.இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது எடுக்கப்பட உள்ளது. முதல் பாகத்தின் சூட்டிங் துவங்குவதற்கு முன்னதாகவே இந்தப் படம் இரண்டு பாகங்களில் வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குநர் சுகுமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் இவர்களுடன் நடிகர் விஜய் சேதுபதியும் வில்லனாக களமிறங்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

புஷ்பா 2 படத்தின் பட்ஜெட் மட்டுமே 350 கோடி எனவும் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்படுகின்றது.இதன்மூலம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவிக்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது புஷ்பா படத்தின் அடுத்த பாகத்திற்காக தயாராக உள்ளார் அல்லு அர்ஜுன். தற்போது தன்னுடைய மனைவியுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இந்த லுக் வெளிப்பட்டுள்ளது. முதல் பாகத்தை காட்டிலும் அதிகமான தாடி, தலைமுடியுடன் இந்த புதிய லுக் அவர் தோற்றமளிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement