• May 07 2024

நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கவுள்ள நீதிமன்றம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் சொகுசு கார்களுக்கு முறையான நுழைவு வரி செலுத்தவில்லை என ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் வழக்கு பெரிதும் பரபரப்பை கிளப்பியது.

இவர் கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வழங்க போகிறது உயர்நீதிமன்றம்.பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

ஆனால் தமக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என நடிகர் விஜய் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது. ஆனால், விஜய் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வணிக வரித்துறை கோரிக்கை வைத்திருந்தது.

இந்த வழக்கில் நடிகர் விஜய்க்கு சாதகமாக தீர்ப்பு வருமா? அல்லது மொத்த அபராதத்தையும் கட்ட சொல்வார்களா? என்று திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement