• Apr 25 2024

நடிகை நயன்தாரா பற்றி வெளியான சூப்பர் தகவல்…இவ்வளவு நாளும் தெரியாம போச்சே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கேரளா மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டம் திருவல்லா பகுதியைச் சேர்ந்த நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியா குரியன்.

2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் திரையுலகில் ஐயா திரைப்படமே இவருக்கு ஹிட் கொடுத்தது.

அதை தொடர்ந்து தமிழ் திரையுலகில் சந்திரமுகி,சிவகாசி,கஜினி,கள்வனின் காதலி,வல்லவன்,தலைமகன்,ஈ,சிவாஜி,பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார்.

மலையாளம்,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக வலம் வந்தவர் தான் இந்த நயன்தாரா.

பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த நயன்தாரா 2013 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருதையும் பெற்றார்.

2013,2015,2017 ஆகிய ஆண்டுகளில் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்று பல விருதுகளை தன்வசம் வைத்துக்கொண்டார்.

இவ்வாறுஇருக்கையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இவர்களுக்கு காதல் ஏற்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.இவ்வாறுஇருக்கையில் இவர் பல படங்களில் தற்போது கெமிட்டாகி வருகின்றார்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் ராசி பற்றி தகவல் வெளியாகி உள்ளது.அதாவது இவரின் ராசி விருச்சிகம் என கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement