• Jan 19 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அக்சயா அளித்த முதல் பேட்டி- பூர்ணிமா காதில் சொன்னது இது தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இது தற்போது சீசன் 7 நடந்து வருகிறது. இந்த சீசனில் எதிர்பாராத டுவிஸ்டுக்கள் பல நடப்பதால் நிகழ்ச்சி வரவர சுவாரஸியமாகச் சென்று கொண்டிருக்கின்றது. வீட்டை விட்டு வெளியேறியிருந்த விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் ஆகியோர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர்.

 இதனால் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருந்த அக்சயா தற்பொழுது பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது பிக்பாஸ் வீட்டுக்குள்ள நான் யாரோட பேச்சைக் கேட்டும் விளையாடல எல்லாரோடையும் சேர்ந்திருந்தேன். ஆனால் தனியாகத் தான் விளையாடினேன்.


எனக்கு அமைதியாக இருக்கும் இடம் தான் பிடிக்கும், ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள்ள ஒரே சத்தமாக இருக்கும். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தற்குப் பிறகு தான் அமைதியாக இருக்கின்றது. எனக்கு கோவம் வரும் தான் ஆனால் அவ்வளவு ஜாஸ்தியாக எல்லாம் வராது ஒரு சேவ் சோனுக்குள்ளேயே இருந்ததால் என்னால பிக்பாஸ் வீட்டுக்குள்ள எல்லோரையும் சண்டை போட்டுக் கொண்டு இருக்க முடில.

அங்க போய் நிறையக் கற்றுக் கொண்டேன். மாயா பற்றி சொல்லனும் என்றால் நண்பர்களுக்காக என்ன வேணும் என்றாலும் செய்யக்கூடிய ஒருத்தங்க அவங்க, அது மாதிரி டைட்டில் வின்னர் ஆகிற தகுதி விக்ரமுக்கு இருக்கா என்று தெரியாது ஆனால் அவர் தன்னால் முடிந்ததைப் பண்ணிட்டு தான் இருக்காரு.


அத்தோடு விஜய் வர்மா வீட்டுக்குள்ள வந்ததும் பூர்ணிமா மைன்ட்ல என்ன நினைச்சிருக்கிறாங்களோ அதை தான் பண்ணிட்டு இருக்கா என்று சொன்னாரு, எனக்குமே அப்பிடி தோன்றியிருக்கு அதனால தான் அவ கிட்ட காதுக்குள்ள சொல்லிட்டு வந்தேன்.பார்த்து விளையாடு, என்றும் அக்சயா தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement