• Apr 22 2026

விடாமுயற்சி ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த அஜித்தின் மகன் ஆத்விக்- முக்கிய பிரபலம் வெளியிட்ட போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அஜித் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் படத்தில் நடித்து வருகின்றார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

 அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. குறிப்பாக இந்தப் படத்தில் அர்ஜுன், த்ரிஷா ஆர்வ, ரெஜினா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சமீபத்தில்கூட அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியிருந்தன. இதில் அஜித்தும் த்ரிஷாவும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்றும் கூறப்படுகின்றது.


இந்த நிலையில் விடாமுயற்சி ஷூட்டிங்கிலிருந்து அஜித் ஒரு மாதம் பிரேக் எடுக்கப்போவதாக கூறப்படுகிறது. அதாவது இதுவரை அஜித் பங்கேற்ற இரண்டு ஷெட்யூல்களிலும் அவருக்கான காட்சிகள் முக்கால்வாசி முடிந்துவிட்டதாம். பிறர் சம்பந்தப்பட்ட காட்சிகளைத்தான் மகிழ் திருமேனி எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம். 

அதனால்தான் அவர் பிரேக் எடுப்பதாக தெரிகிறது.மேலும் அஜர்பைஜானிலிருந்து லண்டன் செல்லும் அஜித் அங்கு தனது குடும்பத்தாருடன் புத்தாண்டு மற்றும் தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கொண்டாடவும் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.


இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸாக விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அஜித்தின் மகன் ஆத்விக் சென்றிருக்கிறார். அங்கு அவர் அர்ஜுனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

Advertisement

Advertisement