• Jan 19 2025

கணேஷ் செய்த காரியத்தால் பதற்றத்தில் இருக்கும் பாக்கியா, கடும் குழப்பத்தில் இருக்கும் எழில்,ராதிகா எடுத்த முடிவு- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது,பாக்கியா பூஜை அறையில் இருந்து தன்னுடைய நிலமையை நினைத்து அழுது கொண்டிருக்கின்றார். பின்னர் விடிந்ததும் செழியனுக்கு காபி கொடுப்பதற்காக ரூமுக்குள் போகின்றார். அங்கு கோபியின் அருகில் செழியன் படுத்துத் துாங்குகின்றார். அப்போது பாக்கியா வந்து செழியனை எழுப்ப வர கோபி அவனை எழுப்ப வேணாம் என்கின்றார்.


செழியன் இப்போ தான் அசந்து துாங்கிறான் அவனைக் குழப்பாத என்று சொல்ல, பாக்கியா தான் கொண்டு வந்த காபியை கோபியிடம் குடிக்க சொல்லி விட்டு கொடுத்து விட்டு வருகின்றார்.கீழே வந்ததும் ராதிகா காபியுடன் வர பாக்கியா தான் காபி கொடுத்து விட்டேன். செழியனுக்கு கொண்டு போனேன் அவன் துாங்கிட்டு இருந்ததால் அவர் கிட்ட கொடுத்திட்டு வந்தேன் என்கின்றார்.

இதனால் ராதிகா பரவாயில்லை, இதற்காக எல்லாம் கோவிக்கமாட்டேன் என்று சொல்லி விட்டு தான் போட்ட டீயை தனக்கு ஒன்று எடுத்து விட்டு மற்றதை பாக்கியாவிடம் குடிக்கச் சொல்லி கொடுத்து விட்டு போகின்றார்.தொடர்ந்து கணேஷ் பாக்கியாவுக்கு கொடுத்த டைம் முடிந்து விட்டது, இதனால் நான் போய் அமிர்தாவைக் கூட்டிட்டு வரப்போகின்றேன் என்கின்றார்.


இதனால் கணேஷின் பெற்றோர், பொறுமையாக இரு பேசிக்கலாம் என்கின்றார், இருந்தாலும் கணேஷ் நான் போய் கூட்டிட்டு வருகின்றேன் எனக் கிளம்பிப் போகின்றார். இதனால் அவர்கள் உடனே போன் பண்ணி பாக்கியாவிடம் சொல்ல, பாக்கியா பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றார்.

இதனால் கணேஷ் வீட்டிற்கு வந்தால் பெரிய பிரச்சினை நடக்கப்போகின்றதே என செல்வியிடம் புலம்புவதோடு அமிர்தாவைக் கண்டதும் நீ கோயிலுக்கு போய்ட்டு வா என்கின்றார். அத்தோடு அவசரம் அவசரமாக எழிலை அழைத்து அமிர்தாவை கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போகச் சொல்லி வற்புறுத்த எழிலும் எதற்காக அம்மா இப்பிடி அனுப்பி வைக்கிறாங்க என்று நினைத்த படியே கோயிலுக்கு கூட்டிட்டு போகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement