உலக கால்பந்து ரசிகர்களின் கனவு நாயகனாக விளங்கும் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில், அவரது வருகை இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பயணத்தின் முக்கிய தருணமாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான், மெஸ்ஸியை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கால்பந்து உலகில் பல சாதனைகளை படைத்த லியோனல் மெஸ்ஸி, இந்தியாவுக்கு வருவது என்பது அரிதான நிகழ்வாகும். 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளவே வந்துள்ளார்.
இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியின் போது, நடிகர் ஷாருக்கான் மற்றும் லியோனல் மெஸ்ஸி நேரில் சந்தித்து, ஒருவருக்கொருவர் தமது கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். இருவரும் சந்தித்த தருணம் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு சிறப்பு நினைவாக அமைந்தது.
Listen News!