• Sep 20 2024

அஜித் செய்த அந்தச் செயல்…வைரலாகும் வீடியோ…என்ன ஒரு மனுஷனப்பா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து பல காலமாக வெற்றிக் கொடி நாட்டி வருபவர் நடிகர் அஜித். சாதாரண ஒரு பைக் மெக்கானிக்காக இருந்த இவர் சினிமாவில் காலடி எடுத்த நாள் முதல் இன்று வரை உச்ச நாயகனாகவே மக்களால் பார்க்கப்படுகின்றார். அந்த வகையில் விடாமுயற்சிக்கும், கடின உழைப்பிற்கும் சிறந்த உதாரணமாக நம்ம தல விளங்குகிறார். இவரது நடிப்பினையும் தாண்டி அழகினையும் நடனத்தையும் ரசிப்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவில் இதுவரை இவர் கிட்டத்தட்ட 60 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறாக படங்களில் ஓய்வில்லாமல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அஜித் தனது குடும்பத்தினருடனும் நேரம் செலவிட மறப்பதில்லை. அவ்வப்போது தனக்கும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் பிடித்த இடங்களுக்கு விசிட் அடித்து தனக்கு நின்மதியையும், மகிழ்ச்சியையும் தேடுவது மட்டுமல்லாமல் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியினையும் கொடுத்து வருவார். இந்த நிலையில் சமீபத்தில் கூட தன்னுடைய குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இவர் சமீபத்தில் 'AK 61' படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் செல்வதற்காக விமானம் நிலையம் சென்றிருந்தார். அங்கு காரில் வந்து இறங்கிய அஜித் செய்த செயல் ஒன்று தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

அதாவது அந்த விமான நிலையத்திற்கு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்களுக்கு கைகொடுத்ததோடு மட்டுமன்றி அவர்களை பார்த்து சல்யூட்டும் அடித்து மரியாதை கொடுத்திருக்கின்றார் நம்ம தல. அதனைப் பார்த்த பலரும் "அஜித்திற்கு இப்பிடி ஒரு மனசா, என்ன ஒரு தங்கமான மனுஷன் இவரு" எனப் புகழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமன்றி தற்போது அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியும் வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement