• May 18 2024

உடலோடு ஒட்டிய உடையோடு புரொமோஷன் நிகழ்விற்கு வந்த நடிகை...என்ன ஒரு அழகப்பா..வைரலாகும் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'ஹேட் ஸ்டோரி 4ம் பாகம்' எனும் இந்தி படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ஊர்வசி ரவுத்தலா. இதனைத் தொடர்ந்து 'ஐராவதம்' எனும் கன்னட படத்தில் நடித்து தென்னிந்தியாவில் கால் பதித்துள்ளார். மும்பை மாடலான இவர் இந்தி, கன்னடத்தை தொடர்ந்து இவர் தற்போது 'தி லெஜண்ட்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகின்றார்.

இப்படமானது எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்து உணர்ச்சிகளும் ஒருங்கிணைந்த வகையில் ஒரு பக்கா கமர்சியல் மாஸ் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தமிழோடு இணைந்து இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படமானது பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கின்றது.

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படமானது ஒரு அன்பான, நல்ல குண நடை உடைய எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், திறமையாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ஒரு லெஜண்டாக எப்படி உருவாகிறான் என்ற கதைக்களத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் படமானது எந்தவொரு தடையுமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து ரசித்து பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.

அதுமட்டுமன்றி கோடிக்கணக்கில் செலவு செய்து இப்படமானது எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்து ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் உடைய படப்பிடிப்பு ஆனது கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன. இப்படத்தினுடைய இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் யாவும் நிறைவு பெற்ற நிலையில் இப்படமானது ஜூலை 28-ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படக்குழுவினர் தற்போது படத்தினுடைய புரொமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் நேற்றைய தினம் தெலுங்கு திரையுலகில் புரொமோஷன் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தனர். அங்கு திரைப்பிரபலங்கள் பேசிய பேச்சுக்கள் பலரது கவனத்தை ஈர்த்ததோ இல்லையோ, கதாநாயகி ஊர்வசி ரவுத்தலா அணிந்து வந்த ஆடை பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது.

அதாவது அந்த நிகழ்வுக்கு இவர் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் மின்னும் கற்கள் பாதித்தது போல் உடலோடு ஒட்டிய ஆடை ஒன்றினை அணிந்து வந்திருக்கின்றார். இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறிக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி அவர் அணிந்திருந்த உடையினது புகைப்படங்களும் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement