• May 18 2024

டிடியை விட அவங்க அம்மா அழகாக இருக்காங்களே…வைரலாகும் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. அதுமட்டுமல்லாது இவர் சில தமிழ்ப் படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றுபவர்கள் அவ்வளவு எளிதாக மக்கள் மத்தியில் பிரபலமாவது இல்லை. ஆனால் இவரைப் பொறுத்த வரைக்கும் குறுகிய காலத்திற்குள்ளேயே பலராலும் அறியப்பட்டு விடடார். அதற்கு காரணம் இவரது புன்னகை கலந்த முகமும், நகைச்சுவை கலந்த துள்ளலான பேச்சும் தான்.

ஆரம்பத்தில் இவர் சன் தொலைக்காட்சியில் பணியாற்றியிருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது என்னவோ விஜய் தொலைக்காட்சி தான். குறிப்பாக 'ஜோடி நம்பர் 1', 'சூப்பர் சிங்கர்', 'ஹோம் ஸ்வீட் ஹோம்', 'ஜோடி சீசன் 7', 'காபி வித் டிடி' போன்ற பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழகியிருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து பல படங்களின் உடைய புரொமோஷன் நிகழ்வுகளையும், விருது வழங்கும் நிகழ்வுகளையும் நடாத்தி இருக்கின்றார். அத்தோடு சமீபத்தில் சின்னத்திரையில் மட்டுமல்லாது வெள்ளித் திரையிலும் காலடி எடுத்து வைத்திருக்கின்றார்.

இந்த நிலையில் தற்போது பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'காபி வித் காதல்' எனும் படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகின்றார். இவ்வாறாக பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் திவ்ய தர்சினியை போலவே அவரது சகோதரியும் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி அவர்கள் தனது தாயுடன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. அதை பார்த்த ரசிகர்கள் "மகளை விட அம்மா ரொம்ப அழகாக இருக்காங்களே" என கூறி வருவதோடு அப்புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement