• Feb 21 2025

பரிசு பெறும் இடத்தில் அஜித் செய்த செயல்..! மிரள வைத்த வீடியோ பதிவு..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் கார் ரேஸிங் டீம் தற்போது 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது.நேற்றைய தினம் ஆரம்பமாகிய இப் போட்டியில் அஜித் 7 ஆவது இடத்தில் இருந்து முன்னேறி தற்போது முதல் மூன்று இடத்திற்குள் வந்துள்ளமையினால் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.


இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அஜித்தினை பார்ப்பதற்கு ரசிகர்கள் பலர் ஒன்று கூடியுள்ள நிலையில் தற்போது அஜித் டீமிற்கு வெற்றி கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.குறித்த கோப்பையினை வாங்கிய அஜித் ஒரு கையில் இந்திய கொடியுடன் முத்தமிட்டுள்ளார்.


அது மட்டுமில்லாமல் அஜித் தனது மகன் ஆத்விக்கை மேடையில் ஏற்றி அவருக்குப் பரிசாக கோப்பையை கொடுத்து அதை மக்களுக்கு காட்ட சொன்னார். இந்த அழகான தருணம் ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது மேலும் அஜித் மற்றும் அவரது மகன் அந்த தருணத்தில் கொண்டாடிய வெற்றி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement