• Apr 02 2025

"எனக்கு இது ஒரு ஸ்பெஷலான படம்" மக்களோடு மக்களாக படம் பார்த்த விஷால்..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

12 வருடங்களின் பின் பெரிய எதிர்பார்ப்புடன் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் அஞ்சலி நடிப்பில் வெளியாகி இருக்கும் மதகஜ ராஜா திரைப்படத்தினை ரசிகர்கள் மிகவும் வரவேற்று வருகின்றனர்.இப் படத்தின் இசை வெளியீட்டிற்கு விஷால் உடல் நிலை மிகவும் மோசமாக கலந்து கொண்டிருந்தமையினால் அனைவராலும் மிகவும் அனுதாபமாக பார்க்கப்பட்டார்.


தற்போது உடல் நிலை குணமடைந்து தனது படத்தினை முதல் நாள் முதல் ஷோவில் மக்களோடு மக்களாக இருந்து பார்வையிட்டுள்ளார்.படம் முடிவடைந்து வெளியில் வரும் போது ஊடகங்களிற்கு பேட்டி அளித்துள்ளார்.


குறித்த பேட்டியின் போது "நான் முழுசா பாத்த முதல் படம் இதான்பொதுவா என் படம் ரிலீஸ் ஆனா தியேட்டருக்கு திரையரங்கிற்கு போய் ஒரு 10,15 நிமிஷம் மட்டும் பார்த்துட்டு வந்துடுவேன்.

ஆனால் "மதகஜராஜா" படத்தை மக்களோடு மக்களாக அமர்ந்து முழுசா பார்த்தேன்.அவங்களோட கைத்தட்டல், விசில், சிரிப்பு எல்லாத்தையும் பார்க்கும்போது ஒரு நடிகனாக மிகவும் சந்தோஷமாக இருக்கு.எனக்கும் சுந்தர் சாருக்கும் இது ஒரு ஸ்பெஷலான படம். "சண்டக்கோழி" க்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த படம் இது" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement