• Nov 07 2025

அஜித் – லோகேஷ் கனகராஜ் காம்போ உறுதியா.? அதிரடியாக வெளியான அப்டேட்.! என்ன தெரியுமா?

subiththira / 14 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போதைய தலைமுறையில் மிகுந்த செல்வாக்கு கொண்ட இயக்குநராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். தனது படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி, லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் (LCU) எனும் பிரபஞ்சத்தையே கட்டியமைத்தவர் எனலாம்.


இவரது இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் ‘கைதி 2’ என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கைதி, விக்ரம், லியோ என மூன்று வெற்றிப் படங்களுக்குப் பின், லோகேஷ் தற்போது எந்த ஸ்டார் ஹீரோவுடன் இணைகிறார் என்பது குறித்து ரசிகர்களிடையே பல ஊகங்கள் கிளம்பியுள்ளன.

கைதி 2 பற்றிய செய்திகளுடன் இணைந்து, இன்னொரு பெரிய செய்தி தற்போது திரையுலகில் தீவிரமாக பேசப்படுகிறது. பிரபல சினிமா வட்டாரங்கள், “இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அஜித் குமாருடன் இணைந்து பணிபுரிய உள்ளார்." என்று கூறிவருகின்றன. 

இந்த செய்தி வெளிவந்தவுடன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகுந்த உற்சாகத்துடன் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். 


அஜித் குமார் தற்போது தனது 64-வது படத்துக்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ‘AK64’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக முன்பே செய்திகள் வெளியாகியிருந்தன.

இதேநேரத்தில், அஜித்தின் அடுத்த கூட்டணி யாருடன் என்பது குறித்து ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது வெளியான தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இப்போதைக்கு, இந்த செய்தி அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் சில பேச்சு வார்த்தைகள் நடத்தியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. 

Advertisement

Advertisement