சமூகம், சாதி, மனித உரிமைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தனது திரைப்படங்களின் மூலம் வலுவான கருத்துகளை வெளிப்படுத்தி வரும் இயக்குநர் மாரி செல்வராஜ், இப்போது ஒரு புதிய கருத்து மூலம் மீண்டும் மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் மாரி செல்வராஜ், “ஏன் பொண்ணுங்க வயசுல கம்மியான பையன காதலிக்க கூடாது? கல்யாண வாழ்க்கையில பொண்ணுங்களுக்கு தான் அனுபவம் அதிகம் தேவை. குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிக்கணும்.
அதனால அவங்க mature-ஆ இருக்கிறது நல்லது தானே? ஆனால் நம்ம சமூகத்தில் இன்னும் ஒரு மனநிலை இருக்கு...வயசு கம்மியா பொண்ணு இருந்தா அவங்க நம்ம சொல்லுறதை கேப்பாங்கன்னு. அதையே நான் பைசன் படம் மூலம் உடைக்கணும் என்று நினைத்தேன்.” எனக் கூறியுள்ளார்.

இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் வெளியானவுடன் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சிலர் மாரி செல்வராஜின் கருத்தை துணிச்சலான கூற்று எனப் பாராட்டியுள்ளனர்.
Listen News!