• Dec 17 2025

அடுத்தடுத்து BLOCK BUSTER படங்களில் களமிறங்கும் சூர்யா… பூஜையுடன் தொடங்கியது “சூர்யா 47”

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர் சூர்யா தொடர்ந்து பிக் பட்ஜெட் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். தற்பொழுது, அவரது “சூர்யா 47” எனப் பெயர் வைக்கப்பட்ட புதிய படம் அதிகாரபூர்வமாக பூஜை விழாவுடன்  தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றதுடன் இதற்கான போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


சூர்யா நடிக்கும் இந்த புதிய படத்தை ஜித்து மாதவன் இயக்குகிறார். இவர் “ஆவேஷம்” படத்திற்குப் பிறகு திரையுலகில் பிரபலமான இயக்குநராக திகழ்கிறார். இயக்குநர் ஜித்து மாதவன் தனது தனித்துவமான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புக்காக அறியப்படுகிறார்.

இந்த புதிய படத்தில், சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இதன் மூலம், படம் உருவாகும் முன்னதாகவே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கும் விதமாக சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் கலந்து கொண்டுள்ளார். அத்துடன், சூர்யா நடிக்கும் படங்கள், பொதுவாக ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன. அவரது நடிப்பின் தனித்துவம் மற்றும் கவர்ச்சியான தோற்றம், ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைக்கும் முக்கிய காரணமாகும்.

Advertisement

Advertisement