• Jan 18 2025

அந்தரத்தில் சுழலும் கார்.. அஜித்துக்கு என்ன ஆச்சு? ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பின் அதிர்ச்சி வீடியோ..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அஜித் மற்றும் ஆரவ் ஒரு காரில் இருக்கும் நிலையில் அந்த கார் கிரேன் மூலம் அந்தரத்தில் துவக்கப்படுகிறது. இதனை அடுத்து ஒரு கட்டத்தில் கார் அந்தரத்தில் சுழல்கிறது. அதன் பிறகு மீண்டும் கார் இறக்கப்படும் காட்சியும் படமாக்கப்பட்டது.

இந்த வீடியோவில் இருந்து அஜித் மட்டும் ஆரவ் ஆகிய இருவரும் காருக்குள் டூப் இல்லாமல் அந்தரத்தில் சுழலும் காட்சியில் நடித்துள்ளனர் என்பதும் இந்த காட்சி முடிந்ததும் படக்குழுவினர் அனைவரும் கைத்தட்டி அஜித் மற்றும் ஆரவ்வுக்கு வாழ்த்து தெரிவித்த காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளது.

இந்த காட்சிகளை பார்க்கும்போது ‘விடாமுயற்சி’ படம் திரையில் வெளியாகும் போது செம ஆக்சன் விருந்து இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.



Advertisement

Advertisement