• Apr 01 2025

போட்றா வெடியை.. ‘விடாமுயற்சி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடித்தவிடாமுயற்சிபடத்தின் அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவே கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆனது. அதன் பிறகும் படப்பிடிப்பில் சில இடையூறுகள் வந்தது என்பதும் வெளிநாட்டு படப்பிடிப்பின் போது தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பு தாமதமானதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் தற்போது படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்ததால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தள்ளி போகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த பல மாதங்களாகவிடாமுயற்சிஅப்டேட் கேட்டு ரசிகர்கள் ஓய்ந்து போய்விட்ட நிலையில் தற்போது திடீரெனவிடாமுயற்சிபடத்தின் சூப்பர் அப்டேட் வந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். அதாவது நாளை அதாவது மார்ச் 14ஆம் தேதிவிடாமுயற்சிபடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாகவும் அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் அஜித் ரசிகர்களுக்கு முழு திருப்தி அளிக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் போட்றா வெடியை என்று சமூக வலைதளங்களில்விடாமுயற்சிஹேஷ்டேக்கை வைரல் ஆக்கி வருகின்றனர்.

அஜித் ஜோடியாக த்ரிஷா நடித்து வரும் இந்த படத்தில் பிக்பாஸ் ஆரவ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் அனிருத் இசையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement