• Jan 19 2025

படுக்கையறை காட்சி.. தனுஷ் எந்த எல்லைக்கும் செல்வார்.. பிக்பாஸ் பூர்ணிமா

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 7வது சீசன் மூலம் பிரபலமான பூர்ணிமா படுக்கையறை காட்சிகளில் நடிப்பது குறித்தும் தனுஷின் நடிப்பு எந்த எல்லைக்கும் செல்லும் என்பது குறித்தும் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 வது சீசனின் போட்டியாளர்களின் ஒருவர் பூர்ணிமா என்பதும், அவர் மாயாவுடன் சேர்ந்து புல்லிங் குரூப் ஆரம்பித்து சக போட்டியாளர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தார் என்பதும் குறிப்பாக டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு அவர் கொடுத்த டார்ச்சர் சொல்லி மாளாது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நெகட்டிவ் இமேஜ் பெற்றாலும் அவருக்கு திரையுலகில் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என்பதும் அவர் பிஸியாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் பூர்ணிமா சமீபத்தில் அளித்த பேட்டியில் படுக்கையறை காட்சிகளில் நடிப்பது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். படுக்கையறை காட்சி என்பது ஒரு படத்தின் கதையுடன் ஒத்துப் போக வேண்டும், திணிக்கப்படக்கூடாது, கதையுடன் ஒத்து போனால் தாராளமாக படுக்கையறை காட்சிகளில் நடிக்கலாம். ஆனால் அதே நேரத்தில் படுக்கையறை காட்சிகளில் நடிப்பதும் நடிக்காமல் இருப்பதும் ஒரு நடிகையின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறினார்.

இதனை அடுத்து தனுஷ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்தனுஷ் பக்கத்து வீட்டு பையன் போல் இருப்பதால் தான் அவர் ரசிகர்கள் மனதில் சீக்கிரம் இடம் பிடித்து விட்டார் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து அந்த கதாபாத்திரத்தின் உயிரோட்டத்தை கொண்டு வர எந்த எல்லைக்கும் செல்வார் என்றும் அதனால் தான் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement