• Oct 09 2024

சம்பாதித்த காசை பாதி செலவு செஞ்சிட்டாரா.. மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

 சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான  அஜய் கிருஷ்ணா தனது மகனின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியதை அடுத்து அவர் சம்பாதித்த சொத்தில் பாதியை இதில் செலவழித்திருப்பார் போல என்று நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.  

விஜய் டிவியில் நடத்தப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் பாடகர்களாக தற்போது திரையுலகில் ஜொலித்து வரும் நிலையில் அவர்களின் ஒருவர் அஜய் கிருஷ்ணா என்பதும் இவர் தற்போது சினிமாவில் பிஸியாக பாடிக்கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சியில் கூட அஜய் கிருஷ்ணா கலந்து கொண்டிருப்பதாகவும் அதனால் இவர் நல்ல வருமானம் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.



இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னுடைய ரசிகையான ஜெசி என்பவரை காதலித்து அஜய் கிருஷ்ணா திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அயான் என்று பெயரிட்டனர்.

இந்த நிலையில் தங்கள் மகனின் முதல் பிறந்த நாளை மிகவும் பிரமாண்டமாக கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்த அஜய் கிருஷ்ணா - ஜெசி  தம்பதியினர் பெரும் செலவு செய்து  உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் அழைத்துள்ளனர்.  இந்த பிறந்தநாள் விழாவில் அஜய் கிருஷ்ணாவுடன் பாடிய மானசி, பரத் மற்றும் குக் வித் கோமாளி குரேஷி, பாடகர் மனோ, சின்னத்திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் மற்றும் விஜய் டிவியின் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.



இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை அஜய் கிருஷ்ணா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களின் பிரமாண்டத்தை பார்த்த ரசிகர்கள் அஜய் கிருஷ்ணா சம்பாதித்த சொத்தின் பாதியை இதில் செலவு செய்திருப்பார் போல என்று கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். மேலும் அவருடைய மகனுக்கும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement