• Jan 18 2025

புல்லிகேங்ன் விட்டு வெளியேறிய ஐஷு... மாயா பேச்ச கேட்டு ரெட் கார்ட் கொடுத்துட்டேன்... எல்லாம் என் தப்புத்தான்... கண்கலங்கிய ஐஷு...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக ஆரம்பமாகி பல திருப்பங்கள் , காதல் , நட்பு , மோதல்கள் , வாக்குவாதங்கள் என விறுவிறுப்பாக விஜய் டிவியில் இடம் பெற்று நிறைவு பகுதியை அடைந்தது. 


பிக் பாஸ் நிறைவு பெற்றாலும் பிக் பாஸ் போட்டியாளர்களின் போட்டிகள் வெளிய போன பின்பும் அந்த ஒரு சில வன்மங்கள் இருந்து கொண்டே இருப்பது ரசிகர்களை அதிர்ச்சிப்படுத்தியது . 


இந் நிலையில் சீசன் 7 பிக் பாஸ் வீட்டில் புல்லிகேங்ன் பெரிதாக பேசப்பட்டது .இந்த குழுவில்  மாயா ,பூர்ணிமா , ஜோவிகா , சரவணன் விக்கிரம் ,நிக்சன் மற்றும் ஐஷு என 6 நபர்களை கொண்ட இந்த குழு பிக் பாஸ் வீட்டையே கொஞ்சம் ஆட்டி படைத்தது . 


பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் பலருடைய உண்மைகள் வெளியே வந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளரான ஐஷு மற்றும் பிரதீப் கிராண்ட் பினாலேக்கு வரவில்லை . 


இந் நிலையில் ஐஷு இணையத்தளங்களில் இவ்வாறு பதிவு செய்துள்ளார். "நான் நம்பி ஏமார்ந்து விட்டேன் . பிக் பாஸ் வீட்டில் எல்லோருடைய குணங்களும் இப்போதான் விளங்குகின்றது . மாயா எல்லாருக்கும் நட்பு வாழ்த்து சொல்லும் போது இணையத்தளத்தில் என்னை மட்டும் tag பண்ணவில்லை .அவர்களுடைய கதையை கேட்டு பிரதீப்க்கு ரெட் கார்ட் காட்டி விட்டேன் . இப்போது எல்லாம் புரிகிறது . அந்த குழுவில் இருந்தது தான் என்னுடைய தப்பு" என்றும் சொல்லி கண் கலங்கியுள்ளார்.

 

மற்றும் பிரதீப் ரசிகர்கள் பிரதீப் மற்றும் ரெட் கார்ட் மூலம் வெளிய போகாமல் இருந்து இருந்தால் பிரதீப் தான் டைட்டில் வின்னர் என்றும் கூறிவருகின்றனர். 

Advertisement

Advertisement