• Jan 18 2025

பிரதீபிடம் மன்னிப்பு கேட்காத புல்லிகேங்ன்... பூர்ணிமா போட்ட டுவிட் பதிவு... விளாசித்தள்ளிய BIGGBOSS ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் பல லட்ச  ரசிகர்களின்  தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு தீவிரமாக கடும் போட்டிகளுடன்  பிக் பாஸ் சீசன் 7நடைபெற்று முடிந்தது. பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக  அராத்தி யூட்டியுப் சேனல் மூலம் பிரபலமான பூர்ணிமா ரவி  கலந்து கொண்டார். 


16 லட்சம் தொகை  பணப்பெட்டியை எடுத்து கொண்டு  பிக் பாஸ் வீட்டை  வெளியேறினார். இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்களில் அதிகபட்ச தொகையுடன் கூடிய பணப்பெட்டியோடு வெளியேறிய போட்டியாளர் என்கிற பெருமையையும் பூர்ணிமா பெற்றுள்ளார்.


இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த பின்னர் இவருடைய பதிவுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். எதிர்பார்த்த விதமாகவே முதல் பதிவு பூர்ணிமா வெளியிட்டுள்ளார். அவர் முதலாவதாக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் . இத்தனை நாட்களாக ஆதரவு தந்ததுக்கும் நன்றி கூறியுள்ளார். பூர்ணிமா பிரதீப் விஷயம் பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளார் . 


பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது எங்க மேல தான் தவறு இருக்கு என மாயா , பூர்ணிமா எல்லோரும் கதைத்தார்கள் . வெளிய போனதும் பிரதீப்ட்ட மன்னிப்பு கேட்கனும் என்று சொன்னவர்கள் வெளிய வந்ததும் அந்த கதையே இல்லை. பிரதீப்ட்ட மன்னிப்பு கேட்கவில்லை ,அவர்களுடைய வேலைய பார்த்து கொண்டு செல்கிறார்கள் . 


பிக் பாஸ் வீட்டுக்குள் நிறைய நாட்கள் இருக்க வேண்டும் என்பதற்காக தான் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது இவ்வாறு மன்னிப்பு கேட்க வேணும் என்று நடித்துள்ளார்கள் என சமூகவலைத்தளங்களில் பூர்ணிமாவை ரசிகர்கள் கடுமையாக திட்டி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பூர்ணிமா மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement