• May 15 2026

ரசிகர்களைப் பார்த்த சந்தோசத்தில் அஜித் செய்த அசத்தலான செயல்..! இன்ஸ்டாவில் வைரலான வீடியோ

shali / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். தனது சினிமா கேரியர் மட்டுமின்றி, கார்பந்தய (Car Racing) ஆர்வத்தால் அதிகளவான ரசிகர்களைக் கொண்டிருக்கும் அவர், சமீபத்தில் மலேசியாவிற்கு செபாங்க் சர்க்யூட் போட்டியில் பங்கேற்க சென்றுள்ளார்.


அஜித், தனது கார் ரேசிங் ஆர்வத்திற்கு முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார்.செபாங்க் சர்க்யூட் போட்டிக்கு பங்கேற்க, கடந்த வாரம் மலேசியா சென்ற அஜித் குமார், போட்டி தொடங்கும் முன் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். 


அஜித் தற்பொழுது செபாங்க் சர்க்யூட் போட்டிக்கான சுற்றுக்கு தயாராகி உள்ளார். இது இன்று மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. அதன்பின்னர், சனிக்கிழமை காலை இறுதி ரேஸ் நடைபெற உள்ளது.

இந்நிலையில், அஜித் போட்டிக்கு முன்னதாக ரேஸிங் சர்க்யூட்டில் நடந்து வரும்போது அவரை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அஜித் அவர்களை பார்த்து கையசைத்து வணக்கம் செய்தார், இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கத்தினர். இந்த நிகழ்வு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement