பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இறுதிக் கட்டத்தை நோக்கி நகரும் நிலையில், இன்றைய தினத்துக்கான மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் விஜய் சேதுபதி எழுப்பிய கேள்வியையும் போட்டியாளர்கள் அதற்கு சொன்ன பதிலும் வைரலாகி வருகிறது.
அதன்படி பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் இன்னும் ஐந்து வாரம் தான் உள்ளது. உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினார் விஜய் சேதுபதி.
அதற்கு முதலாவதாக பதில் அளித்த ஜாக்குலின், இருக்கப் போறது ஒரு வாரமோ, ரெண்டு வாரமோ, இல்ல பைனல்ஸோ.. நான் என்னுடைய விளையாட்டை விளையாட விட்டு தான் செல்லுவேன் என தெரிவித்தார்.
d_i_a
அதன் பின்பு முத்துக்குமரன், எங்கெல்லம் உழைப்பதற்கான வாய்ப்பு கிடைக்குதோ, யோசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்குதோ அங்கெல்லாம் உழைச்சிடனும்.. பண்ணுற தப்பை முடிஞ்ச அளவுக்கு தவிர்க்கணும் என்றார்.
இதையடுத்து விஷால், காமெடி பிலிம்ஸ் என்டா தொடக்கத்தில் இருந்து இறுதி வரை காமெடி பண்ணிட்டு இருக்கனும் என்று இல்ல. எமோஷனலும் இருக்கும் என்று சொல்ல, பத்து வாரமா நீங்க இதையே காமிச்சிட்டு இருந்திங்க என்றா எங்களுக்கு எப்படி இருக்கும் என பதிலடி கொடுக்கிறார் விஜய் சேதுபதி.
இறுதியாக ஐந்து வாரம் கடந்து போனாலே வெற்றி தான் என சௌந்தர்யா சொல்லுகிறார். இதை கேட்டு அரங்கமே அதிர்ந்து இருந்தது.
Listen News!