• Jan 19 2025

பாலாஜி முருகதாஸ் ரகசிய திருமணம்.. ஷிவானி நாராயணன் வீட்டில் எடுத்த அதிரடி முடிவு?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக நேற்று அவர் தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் அந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இது பாலாஜியின் உண்மையான திருமணமா? அல்லது ஏப்ரல் 1 முட்டாள் தினத்திற்கான பதிவா? அல்லது திரைப்படங்களில் வரும் காட்சியா? என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் ஷிவானி நாராயணன் வீட்டில் அதிரடி முடிவு எடுத்திருப்பதாக புறப்படுகிறது.

பாலாஜி மற்றும் ஷிவானி நாராயணன் கெமிஸ்ட்ரி பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது ஏற்பட்டது என்பதும் ஷிவானி நாராயணன் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு வந்தபோது அவரை திட்டினார் என்றாலும் அதன் பின்னர் பிக்பாஸ் முடிந்த பிறகு இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது.

பாலாஜி பிறந்தநாளின் போது ஷிவானி குடும்பத்தோடு சென்று வாழ்த்து தெரிவித்தது ஷிவானி பிறந்தநாளின் போது பாலாஜி நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தது ஆகியவற்றை பார்த்தபோது அனேகமாக இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று தான் கூறப்பட்டது.

ஆனால் திடீரென தற்போது பாலாஜி திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த நிலையில் ஷிவானி நாராயணனுக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்ப்பதாகவும் தொழிலதிபர் ஒருவரை பேசி முடிவு செய்து விட்டதாகவும் விரைவில் திருமணம் குறித்த செய்தி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல்களை எல்லாம் ஷிவானி நாராயணன் குடும்பத்தினர் மறுத்துள்ளதாகவும் இப்போதைக்கு ஷிவானி திருமணம் இல்லை என்று அவர்கள் கூறியிருப்பதாகவும் ஒரு தகவல் தெரியவந்துள்ளது. மொத்தத்தில் பாலாஜியின் திருமணம் உண்மையா? ஒருவேளை உண்மையாக இருந்தால் ஷிவானி வீட்டில் என்ன அதிரடி நடக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement