• Nov 05 2024

ரஞ்சித்துக்காக வீடியோ ஆதாரத்துடன் வரிந்துகட்டி பேசிய ADK.. நியாயமா இது?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கை தமிழர் தான் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம். இவர் பிரபல இசையமைப்பாளராக காணப்படுகின்றார். ராப் பாடல்கள் பாடுவதில் கைதேர்ந்தவராக காணப்படுகின்றார்.

பிக் பாஸ் சீசனில்  6ல் 20 போட்டியாளர்கள் மொத்தமாக கலந்து கொண்டார்கள். அதில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் ராப் பாடகராக ADK கலந்து கொண்டார். 2012 ஆம் ஆண்டு வெளியான ஆர்யன் என்ற இசை ஆல்பம் மூலம் பலரின் கவனம் ஈர்த்தவர் ADK.

இவருடைய முதலாவது ஆல்பம் சாங் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனால் இவர் மிகவும் பிரபலமானார் . தற்போது ADK என்ற பெயரில் பாடி வரும் ஆர்யன் தினேஷ், உலகளவில் மிகவும் புகழ்பெற்ற தமிழ் ராப் இசைக் கலைஞராக உள்ளார்.


இந்த நிலையில்,  பிக் பாஸ் சீசன் எட்டு பற்றி தனது கருத்தை குறிப்பிட்டுள்ளார் ADK. அதிலும் ரஞ்சித் பற்றிய பிம்பத்தை எடுத்துக் கூறி இப்படித்தான் நாங்கள் பார்க்கும் விதம் ஒவ்வொன்றும் வெவ்வேறாக தெரியும் என அழகாக கூறியுள்ளார்.

அதாவது ரஞ்சித் பிக் பாஸ் வீட்டில் உள்ள  பெண்களின் கன்னத்தைக் கிள்ளியும் நெத்தியிலும் முத்தமிட்டு இருப்பார். அந்த வீடியோவை இரு வேறுபாடுகளுக்கு ஒப்பிட்டு ADK தனது கருத்தை கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,

Advertisement

Advertisement