அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ’விடாமுயற்சி’ படம் கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் நிலையில், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சற்று முன் தனது சமூக வலைதளத்தில் ஒரு செய்தியை அறிவித்துள்ளார்.

அதில் ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் என்ற பகுதியில் தற்போது ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், வேற லெவல் என்டர்டைன்மென்ட் பெரிய திரையில் காத்திருக்கிறது என்றும், 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் உறுதியாக வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
A stunning looking #AjithKumar from the shoot of #GoodBadUgly in Madrid ❤🔥
VERA LEVEL entertainment on the big screens for Pongal 2025 🔥
 @MythriOfficial @Adhikravi @suneeltollywood @AbinandhanR @ThisIsDSP @editorvijay @GoodBadUglyoffl @supremesundar pic.twitter.com/7loRVoIw96
 
                              
                             
                             
                             
                                                     
                                             
                                             
                                             
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _69018ba7ea1f8.jpeg) 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!