தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை திரிஷா, தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட்டால் மீண்டும் ஒரு முறை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி திரிஷாவை மீண்டும் ஒரு ஸ்டைலிஷ் குயினாக மாற்றியுள்ளன.
திரிஷா வெளியிட்ட புகைப்படங்களில், அவருடைய ஸ்டைலிஸ் லுக் மற்றும் அழகு என்பன ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்துள்ளன. அத்துடன் இதைப் பார்த்த ரசிகர்கள் " திரிஷா கம்பேக்...!" என்று கமெண்ட் செய்தும் வருகின்றார்கள்.
திரிஷா தனது திரைப்பட வாழ்க்கையை 2000ம் ஆண்டு ஜோடி படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தொடங்கினார். அதன்பின் வந்த மௌனம் பேசியதே, சாமி, 96 போன்ற படங்கள் வழியாக தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்தார். அதேபோன்று தெலுங்கிலும் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார்.
அண்மையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த 'குட்பேட் அக்லி' திரைப்படத்தில் திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தவகையில் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள் குறைந்த நேரத்திலேயே அதிகளவான லைக்குகளைப் பெற்று வைரலாகியுள்ளது.
Listen News!