• Nov 25 2024

ஹோட்டல், துணிக்கடை எல்லாம் சரியா வராது.. அப்பா போலவே வைரக்கடை ஆரம்பித்த தமன்னா..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

பொதுவாக சினிமா பிரபலங்கள் தாங்கள் சினிமாவில் சம்பாதித்த பணத்தை ஹோட்டல், துணி கடை, ரியல் எஸ்டேட் என முதலீடு செய்வார்கள். நடிகை தமன்னா வித்தியாசமாக மும்பையில் வைர கடையை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை தமன்னா தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணியின் நடிகையாக உள்ளார் என்பதும் இந்தியிலும் அவர் சில திரைப்படங்களில் என்பது அனைவரும் அறிந்ததே. அது மட்டும் இன்றி சில வெப் தொடர்களில் நடித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம். 

நடிகை தமன்னாவுக்கு என இன்னும் மார்க்கெட் இருக்கிறது என்றும் குறிப்பாக ’ஜெயிலர்’ படத்தில் அவருடைய ஒரே ஒரு டான்ஸ் காரணமாகத்தான் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றும் கூறப்படுவதுண்டு. 



இந்த நிலையில் நடிகை தமன்னா ஏற்கனவே சில பிசினஸ்களை செய்து வரும் நிலையில் தற்போது அவர் மும்பையில் வைரம் விற்பனை செய்யும் கடையை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே தமன்னாவின் தந்தை ஒரு வைர வியாபாரி என்பதால் அவர் அளித்த அறிவுரையின்படி தமன்னா இந்த கடையை ஆரம்பித்துள்ளார். 

இந்த வைரக்கடையில் நேரடியாக வந்து மட்டுமின்றி ஆன்லைனிலும் விற்பனை செய்யும் வசதி உள்ளது. ஆன்லைனில் விதவிதமாக தமன்னாவின் கடையில் உள்ள வைர நகைகளை பார்த்து ஆர்டர் செய்து கொள்ளலாம் என்பதும் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்து கொடுப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த வைர பிசினஸ் மூலம் தமன்னாவுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வந்து கொண்டிருப்பதாகவும் இந்த பிசினஸை இன்னும் அவர் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement