• Sep 13 2024

அசோக்செல்வனின் புதுப்படம் மெகா ஹிட் தான் ... படத்தில் இணையும் ஜெயிலர் நாயகன் .. அடடே சூப்பர் நியூஸ்

Kamsi / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் தான்  அசோக் செல்வன் .தொடர்ந்து  வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் . இந் நிலையில்  அவருடைய அடுத்த படத்தை பெண்இயக்குநர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


‘சூது கவ்வும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான அசோக் செல்வன் அதன் பிறகு ’தெகிடி’ ’ஆரஞ்சு மிட்டாய்’ ’கூட்டத்தில் ஒருவன்’ ’சில சமயங்களில்’ உள்பட பல படங்களில் நடித்தார். ’ஓ மை கடவுளேமற்றும் ’ப்ளூ ஸ்டார்’ ஆகிய படங்கள்  அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. 


இந்த நிலையில் அசோக் செல்வன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தைஇயக்குநர் பிரியா இயக்க இருப்பதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே ’கண்ட நாள் முதல்’ உள்பட சில படங்களை இயக்கிய நிலையில், அசோக் செல்வன் அடுத்த படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.



‘பொன் ஒன்று கண்டேன்’ என்று இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த படத்தில் அசோக் செல்வன் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ’ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மகனாக நடித்த வசந்த் ரவி நடிக்க இருப்பதாகவும் இது ஒரு முக்கோண காதல் கதை என்றும் கூறப்படுகிறது.


மற்றும் முக்கியமாக யுவன் ஷங்கர் ராஜா  இசை அமைக்க இருப்பதாக தெரிகிறது. இந்த படம் குறித்த கூடுதல் விவரங்கள் மிக விரைவில் படக்குழுவினரால் அறிவிக்கப்படும் .

Advertisement

Advertisement