• Apr 15 2026

மோடியா.? ராகுலா.? நக்கலாக பதிலளித்த நடிகை டாப்ஸி.! இணையத்தைக் கலக்கிய வீடியோ

shali / 1 month ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள டாப்ஸி மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளார். தமிழில் பல வெற்றிப்படங்கள் மூலம் கவனம் பெற்ற அவர், தற்போது தனது புதிய ஹிந்தி படமான ஆஷி (Ashi) படத்தில் பிஸியாக உள்ளார்.

அந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் போது அவரிடம் கேட்கப்பட்ட ஒரு அரசியல் சார்ந்த கேள்விக்கு அவர் அளித்த நகைச்சுவை கலந்த பதில் தற்போது வைரலாக பரவி வருகிறது.


நிகழ்ச்சியின் போது பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். எனினும், “உங்களுக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர் யார்? இந்திய பிரதமர் நரேந்திர மோடியா? அல்லது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியா?” என்ற கேள்வி அதில் முக்கியமானதாக அமைந்திருந்தது. 

இந்தக் கேள்வி எழுந்ததும் டாப்ஸி அளித்த பதில் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது, “நான் இந்த நாட்டுக்குள் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் என் பதில், மோடி.” என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதும், பல்வேறு கருத்துக்கள் வெளியாகத் தொடங்கின. சிலர் டாப்ஸியின் புத்திசாலித்தனமான பதிலை பாராட்டினர்.மற்றொருபுறம், சிலர் அவரது பதிலை அரசியல் நக்கலாகவே எடுத்துக் கொண்டுள்ளனர். 

Advertisement

Advertisement