தமிழ் சினிமாவில் தனித்துவமான குரலாகத் திகழும் மாரி செல்வராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
சாதாரண பின்னணியில் இருந்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்த மாரி செல்வராஜ், தனது வாழ்க்கைப் பயணத்தில் வாசிப்பின் தாக்கம் மிகப் பெரியது என அந்தப் பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.

அதாவது, " எனக்குள் இருந்த பயத்தைப் போக்கி, என் கதைகளை உலகிற்குச் சொல்லும் மொழியையும், துணிச்சலையும், ஆற்றலையும் தந்தது புத்தக வாசிப்புத் தான்." என்று கூறியிருந்தார்.
அவரது படைப்புகளில் காணப்படும் சமூக அரசியல் விழிப்புணர்வு, ஒடுக்கப்பட்ட குரல்களின் வெளிப்பாடு, மனித உணர்வுகளின் நுட்பமான சித்தரிப்பு ஆகிய அனைத்தும் அவரது வாசிப்பு அனுபவங்களுடன் நேரடியாக இணைந்தவை என்பதை அவர் இதன் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
Listen News!