• Feb 27 2026

Oh My God.! அபிஷன் ஜீவிந்தின் வித் லவ் திரைப்படத்தின் இத்தன நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா சூழலில் புதிய இயக்குநர்கள், புதிய கதாபாத்திரங்கள், வித்தியாசமான தயாரிப்புகள் ஆகியவை ரசிகர்களுக்கு எப்போதும் புதுமையை தரும் அம்சங்களாகும். அத்தகைய படைப்புகளில் ஒன்றாக, சமீபத்தில் வெளிவந்த “வித் லவ்” (With Love) படம் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதித்துள்ளது. இந்த படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து, அறிமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ளார்.


“வித் லவ்” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள அபிஷன் ஜீவிந்த், டூரிஸ்ட் பேமிலி மூலம் இயக்குநராக அறிமுகமானவர், இதில் ஹீரோவாக கலந்துள்ளார். இந்த படத்தில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக அறியப்படும் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். 

“வித் லவ்” படம் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளே ரசிகர்கள் திரையரங்கில் கூட்டம் கூட்டமாக சென்றிருந்தனர்.

இந்நிலையில், இந்தப் படம் முதல் 10 நாட்களில் உலகளவில் 21 கோடி வசூல் செய்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளது. இது படத்தின் ஹிட் நிலையையும், உலகளவில் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பையும் தெளிவாக காட்டுகிறது.

Advertisement

Advertisement