• Jan 19 2025

நாம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.. கணவரின் நினைவு நாளில் சீரியல் நடிகை..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

’நாதஸ்வரம்’ சீரியலில் நடித்த ஸ்ருதி சண்முகபிரியா கணவர் அரவிந்த் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் ஒரு வருட நினைவு நாளில் ’நாம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்’ என்று  பதிவு செய்துள்ளார்.

’நாதஸ்வரம்’ சீரியலில் நடிக்க நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரது மரணம் ஸ்ருதி சண்முகப்பிரியாவை மிகப் பெரிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அவர் அவ்வப்போது தனது கணவருடன் இருந்த புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு அவர் இன்னும் தன்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே அவ்வப்போது பதிவு செய்து வந்தார்.

கணவர் இறந்த நாளிலிருந்து அவருடைய பழைய வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து ரசிகர்கள் பலர் இந்த அளவுக்கு இறந்த ஒருவர் மீது அன்பு செலுத்த முடியுமா? அரவிந்துக்கு தான் ஸ்ருதியுடன் வாழ கொடுத்து வைக்கவில்லை என்பது போன்ற கமெண்ட்ஸ்களை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கணவர் அரவிந்த் இறந்து ஒரு வருடம் ஆனதை அடுத்து ஸ்ருதி சண்முகம் தனது சமூக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை செய்துள்ளார். இந்த ஒரு வருடம் எனக்கு மிகவும் கடுமையாக இருந்தது, உங்களை நான் எந்த நேரத்திலும் ஒரு நிமிடம் கூட மிஸ் பண்ணவில்லை, எப்பொழுதும் உங்கள் நினைவாகவே வாழ்ந்து கொண்டிருந்தேன், நீங்களும் என்னுடன் தான் இருந்தீர்கள், எனக்கு பாசிட்டிவ் எண்ணங்களை கொடுத்து என்னை வழிநடத்தினீர்கள்.

உங்கள் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு, உங்களை என் மனதில் சுமந்து கொண்டு நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த வருடம் நான் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டேன். வாழ்க்கையின் புதிய பரிணாமத்தையும் அறிந்து கொண்டேன். ஏற்கனவே நாம் சேர்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், மரணம் நம்மை எப்போதும் பிரிக்காது’ என்ற பதிவு செய்துள்ளார் இந்த பதிவுக்கு ஏராளமானோர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement