• Apr 11 2025

சர்வதேச விழாவில் பங்கேற்காததால் எதிர்ப்பு....பாதுகாப்பு கோறும் நடிகை!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கவில்லை என்பதற்காக அச்சுறுத்தலினை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கொடவா சமூகத்தினர் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளனர்.

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு முக்கிய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காது இருந்துள்ளார். இதனால், கொடவா சமூகத்தினர் மிகுந்த அதிருப்தியடைந்து அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மட்டுமல்லாமல், சில தீவிர கருத்துக்களும் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளனர்.


இந்நிலையில், கொடவா சமூகத்தினர் நடிகை ராஷ்மிகாவுக்கு உறுதியான பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்றினை எழுதியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வழங்கவில்லை. ஆனால், மாநில அரசு மற்றும் காவல்துறை ராஷ்மிகாவின் பாதுகாப்பு குறித்து தகவல் திரட்டுவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement