• Mar 10 2025

ரீ-ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படம்....ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

2016ம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் நடித்த ரஜினிமுருகன் படம் மாபெரும் ஹிட் கொடுத்திருந்தது. இந்தப் படத்தில் கிராமத்து பின்னணியுடனான மகிழ்ச்சி நிறைந்த காமெடி, காதல், உணர்வுப் படமாக காணப்பட்டது. இந்தப் படம் வெளியான போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் திரையரங்கில் அனுபவித்தனர்.


தற்போது வெளியான தகவலின் படி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினிமுருகன் படத்தை திரையரங்குகளில் வெளியிடப்போவதாக வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது திரையரங்குகளில் பெரிய வெற்றியை சந்தித்து வரும் நடிகராக சிவகார்த்திகேயன் உள்ளார்.


‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான ‘ரஜினி முருகன்’ திரையுலகில் மாபெரும் வசூலைப் பெற்றிருந்தது. அந்தவகையில் இந்தப் படத்தினை ரீ-ரிலீஸ் செய்வது தொடர்பாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மீண்டும் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்காக எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement

Advertisement