• Apr 11 2025

தளபதி விஜய் ஒரு ஸ்வீட்ஹார்ட்....விஜயைப் புகழ்ந்து தள்ளிய நடிகர்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய 2025ம் ஆண்டின் IIFA விருது வழங்கும் விழாவில் பல நடிகர்கள் கலந்து கொண்டனர். அதில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் தளபதி விஜய் குறித்து பகிர்ந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

இந்த விருது விழாவில் பங்கேற்ற பாபி தியோல், தன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்ததுடன் தளபதி விஜய் பற்றிய முக்கிய தகவல்களையும் வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில் "கங்குவா படத்தைத் தொடர்ந்து, நான் தளபதி விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தில் அவருடன் நடித்து வருகிறேன் என்றார். அத்துடன் விஜய் உண்மையிலேயே ஸ்வீட் ஹார்ட்!  என்றதுடன் அவர் எப்பொழுதும் எளிமையாகவும், சிம்பிளாகவும் இருப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.


இது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசத்தை அளித்துள்ளது. ஏற்கனவே ‘ஜனநாயகன்’ படம் பற்றிய எதிர்பார்ப்பு காணப்பட்டிருந்த நிலையில் பாபி தியோலின் இந்தக் கருத்துக்கள் ரசிகர்களிளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தயுள்ளது.

பாபி தியோல் கூறிய தகவலால் விஜயின் தனித்துவமான கதாபாத்திரம், நடிப்பு மற்றும் அரசியல் தொடர்பான பின்னணி போன்றவை படம் பற்றிய சுவாரஸ்யத்தை மெருகூட்டியுள்ளது. அத்துடன் படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் கமெண்டில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Advertisement

Advertisement