• Jan 18 2025

புற்றுநோய் பாதிப்பு... கணவர் இறப்பு... என பல துன்பங்களை சந்தித்த நடிகை சத்யப்ரியா... இவரின் வாழ்க்கையில் இத்தனை சோகமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் தான் நடிகை சத்யப்ரியா. இதற்கு முன்னர் இவர் 'கோலங்கள்' சீரியலில் தேவயானியின் அம்மாவாக கற்பகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சீரியலை தொடர்ந்து கிட்டத்தட்ட 5வருடத்திற்குப் பின்னர் தான் 'எதிர்நீச்சல்' சீரியலில் நடித்துள்ளார்.

மேலும் இதுவரைக்கும் இவர் 350இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தமிழே தெரியாத ஊரில் இருந்து வந்த இவர் ரொம்ப சூப்பராகத் தமிழ் பேசுவார். இதையும் தாண்டி இவரது வாழ்க்கையில் பல சோகங்களும் இடம்பெற்றிருக்கின்றது. 


அந்தவகையில் இவரின் நிஜப் பெயர் சத்யப்ரியா. இவர் மார்ச்-04-1953 இல் ஆந்திராவில் பிறந்தார். அப்பா நாகேஸ்வரராவ். அம்மா சீதா ரத்தினம். இவரின் அப்பா ஒரு ஓட்டலை சொந்தமாக வைத்து நடாத்தி வந்த போது இவருக்கு கலை மேலயும் ரொம்ப ஆர்வம் இருந்திருக்கின்றது. இதனால் நாடகக்குழு ஒன்றினையும் வைத்து நடாத்தி வந்துள்ளார்.

இதனால் வீட்டின் மூத்தமகளான இவர் டான்ஸில் திறமையான ஒருவராக விளங்கி வந்தார். இவருக்கு 3தம்பி, 1தம்பி உள்ளனர். ஆனால் இவர் தான் அவரின் குடும்பப் பொறுப்புக்களை கவனித்து வந்துள்ளார். பீகாரில் நடிகர் கமலுடன் இணைந்து நடனம் ஆடி இருக்கின்றார். நடனத்தில் மட்டுமன்றி படிப்பிலும் சிறந்து விளங்கி இருக்கின்றார்.

1974 இல் இவருக்கு கிடைத்த ஹிந்தி பட வாய்ப்பால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இதனையடுத்து தெலுங்கு பட வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. 'மஞ்சள் முகமே வருக' என்ற படத்தின் வாயிலாக தமிழிலும் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வந்தார்.


இவ்வாறாக படங்களில் நடித்து வந்து கொண்டிருந்த போது தான் இவருக்கு தெலுங்குப் படத்தயாரிப்பாளர் ஒருவருடன் இவருக்கு காதல் மலர்ந்தது. இவர்கள் இருவருக்குமிடையில் ஆரம்பத்தில் மோதல் ஏற்பட்டுத்தான் காதல் மலர்ந்ததாக கூறப்படுகின்றது. அதாவது இவரின் படத்திற்கு சத்யப்ரியா கம்மியான டேட் கொடுத்தமை தான் காரணமாம். 

பின்னர் இவர்களின் காதல் கல்யாணத்திலும் முடிந்தது. அவர் வேறு யாருமில்லை. என்.எஸ். முகுந்தா என்பவர் தான். மேலும் வீட்டை எதிர்த்துத் தான் திருமணமும் செய்திருக்கின்றார் சத்யப்ரியா. திருமணமாகி கொஞ்ச காலத்திலேயே ஒரு மகனும் பிறந்தான். இதனையடுத்து 5வருடத்தில் பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இவரின் மகன், மகள் இருவருக்கும் திருமணம் முடிந்து பேரன் பேர்த்தியும்உள்ளனர்.


இவரின் கணவருக்கு திடீரென புற்றுநோய் ஏற்பட்டதால் ஏழ்மையான நிலைக்கும் தள்ளப்பட்டார். இதனால் தெலுங்குப் படங்களில் டப்பிங்கும் கொடுத்து வந்தார். அதுமட்டுமல்லாது குணசித்ர வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார். 

இவ்வாறு வாழ்க்கையை முன்னெடுத்து வந்த இவருக்கு கணவரின் இறப்பு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. 1987 இல் இவரின் கணவரின் உயிர் போனது. இதனைத் தொடர்ந்து தான் இவர் அந்தக் கவலையில் இருந்து மீண்டு தற்போது சீரியல்களிலும் நடித்து வருகின்றார். இன்றுவரை தூணாக இருந்து தனது குடும்பத்தையும் இவரே தாங்கி வருகின்றார்.     

Advertisement

Advertisement