• Jan 18 2025

பிரபல நடிகையின் மரணத்தால் கெரியரைத் தொலைத்த காதல் சுகமானது திரைப்பட நடிகர்- இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல்யமான நடிகராக வலம் வந்தவர் தான் தருண் குமார். இவரக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்பட்டது. இந்த நிலையில் இவர் குறித்து தான் தற்பொழுது வாங்க பார்க்கலாம்.

1983ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி சென்னையில் பிறந்திருக்கின்றார். இவருடைய அப்பா ஒரு சீரியல் இயக்குநராக இருந்திருக்கின்றார்.இவருடைய அம்மா ரோஜா ரமணி சீரியல் நடிகையாக இருந்திருக்கின்றார்.இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை சென்னையிலும் மேற்படிப்பை ஆந்திராவிலும் மேற் கொண்டாராம்.


இவருடைய அம்மா சீரியல் ஆட்டிஸ்டாக இருந்ததால் அவர் சந்திக்கும் பிரபலங்கள் எல்லோரிடமும் தனது மகனையும் அறிமுகப்படுத்தி இருந்தாராம். இதனால் தான் இவருக்கு 1990 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பும் கிடைத்ததாம்.

இப்படத்திற்காக இவர் தேசிய விருதும் பெற்றாராம். தொடர்ந்து மலையாள சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாராம்.அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நுவே தவாலி என்னும் படத்தின் மூலம் தான் கதாநாகனாக அறிமுகமாகினாராம். இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டையும் பெற்றுக் கொடுத்ததாம்.


தொடர்ந்த தெலுங்கு சினிமாவில் பல படங்களிலும் தமிழில் காதல் சுகமானது, புன்னகை தேசம் என பல படங்களில் நடித்திருந்தாராம்.2009 வரை நடித்து வந்த இவர் படவாய்ப்பு கிடைக்காததால் சினிமாவில் இருந்து விலகினாராம். பின்னர் 2014 யுதம் என்னும் தெலுங்கு படத்தில் நடித்திருந்தாராம்.

இப்படமும் தோல்வி அடைந்ததாம். இப்படி இவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியுற்றதோடு தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்த ஆர்த்தி அவர்கள் சூசைட் பண்ணி இறந்து போனதற்கு இவர் தான் காரணம் என்றும் அந்த காலத்தில் பேசப்பட்டு வந்ததாம்.


ஆனால் ஆர்த்தி அகர்வாலின் இறப்பு குறித்து எந்தவொரு தகவலையும் தருண் சொல்லாமல் இருந்தாராம். இதனால் அவருடைய அம்மாவான ரோஜா ரமணி ஓர் இன்டர்வியூவில் ஆர்த்தி அகர்வாலுக்கும் என் பையனுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை. அவங்க வெறும் நண்பர்கள் தான் அந்த பொண்ணு இறந்ததால் என்னுடைய பையனின் கெரியர் தான் காணாமல் போச்சு தயவு செய்து இப்படி பேசாதீங்க என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தாராம்.

தொடர்ந்து படவாய்ப்பு இல்லாததால் சினிமாவை விட்டு விலகி தனியாக பிஸ்னஸ் செய்து வருகின்றாராம்.அததோடு 40 வயது ஆகியும் இன்னும் திருமணம் முடிக்காமலும் இருக்கின்றாராம்.இவருக்கு கிரிக்கெட் என்றால் ரொம்பவும் பிடிக்குமாம். சினிமாவை தெரிவு செய்யாமல் இருந்திருந்தால் இவர் கிரிக்கெட் பக்கம் தான் போயிருப்பார் என்றும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement