• Jan 18 2025

பிரசாந்தின் மஜ்னு திரைப்படத்தில் நடித்த கதாநாயகி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?- இவருடைய தந்தை சூப்பர் ஸ்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரசாந்த் நடிப்பில் வெளியான மஜ்னு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ரிங்கி கண்ணா.இப்படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவெற்புக் கிடைத்தது. இருப்பினும இதன் பின்னர் நடிப்பிலிருந்து விலகி தற்பொழுது வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.எனவே இவர் குறித்து தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க.

ரிங்கி கண்ணா 1977ம் ஆண்டு ஜீலை 27ம் தேதி மும்பையில் பிறந்திருக்கிறார். தற்பொழுது இவருடைய வயது 45. இவர் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே மும்பையில் தான். படிப்பின் மீ மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும் இருந்திருக்கின்றார். இவர் போடிங் ஸ்கூலில் தான் இருந்திருக்கிறார்.


ரிங்கி கண்ணா பாலிவூட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்த ராஜேஸ் கண்ணாவின் மகள் ஆவார். இவருடைய அம்மா நடிகை டிம்பில் கண்ணாடியா. இவருக்கு அக்கா ஒருவர் இருக்கிறார். அவருடைய பெயர் ருவிங்கில் கண்ணா. இவர் அக்ஷயகுமாரின் மனைவி ஆவார். ருவிங்கில் கண்ணா சில படங்களில் நடித்திருக்கின்றார்.

ரிங்கி கண்ணாவின் குடும்பத்தினர் திரையுலகைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இவர் சினிமா பற்றிய எந்தவொரு விடயமும் தெரியாமல் சாதாரண பெண்ணாகத் தான் வளர்ந்திருக்கின்றாராம். தொடர்ந்து அமெரிக்காவில் படித்து முடித்த இவர் அடுத்து என்ன பண்ணலாம் என்று முடிவெடுத்து தான் சினிமாவில் நடிக்க வந்தாராம்.

அதன்படி சில ஹிந்தித் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.தொடர்ந்து 2001 தமிழில் மஜ்னு திரைப்படத்தில் நடித்தார். பின்னர் தனக்கு நடிப்பு செட்டாகாது என்று நினைத்து 2003ம் ஆண்டு சமீஸ் சரன் என்ற பிஸ்னஜ்மேனைத் திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டாராம்.


இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்களாம். தன்னுடைய அப்பாவின் இறப்புக்காக மட்டும் தான் ஒருமுறை இந்தியா வந்திருந்தாராம். அதற்கு பிறகு அவர் இந்தியாவிற்கு வந்ததே இல்லையாம்.லண்டலின் பிஸ்னஸ் வுமனாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement