• Jul 29 2026

ஜெயிக்கிற ஆசையே இல்லை.. விரக்தியில் பேசிய சமந்தா.! ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த பேட்டி

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது திரையுலக பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.

அந்த பேட்டியில், “முன்பெல்லாம் சினிமா ஒரு ஓட்டப்பந்தயம் என்று நினைத்தேன். அதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், மற்றவர்களை விட முன்னேற வேண்டும், இறுதிக்கோட்டை அடைந்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. 


ஆனால் காலப்போக்கில் அந்த எண்ணம் மாறிவிட்டது. உண்மையில் அப்படி ஒரு போட்டியே இல்லை என்பதையும், நாம் அடைய வேண்டிய ஒரு குறிப்பிட்ட இறுதிக்கோடும் இல்லை என்பதையும் புரிந்துகொண்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வாழ்க்கையிலும் தொழிலிலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாதை இருப்பதாகவும், மற்றவர்களுடன் ஒப்பிடாமல் தன்னுடைய வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் முக்கியமாகக் கருத கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த மனப்பக்குவமே தற்போது தனக்கு அமைதியையும் தெளிவையும் வழங்கியுள்ளதாக சமந்தா குறிப்பிட்டார்.

சமந்தாவின் இந்த கருத்துகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு போட்டி மனப்பான்மையை விட தன்னம்பிக்கையுடனும் சுய முன்னேற்றத்துடனும் வாழ வேண்டும் என்ற முக்கியமான செய்தியை அவரது பேச்சு எடுத்துரைப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement