• Jan 18 2025

Soori அண்ணா உங்க Blessings வேண்ணும்! திருச்செந்தூரில் நடிகை ரம்யா பாண்டியன்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

யோகா மாஸ்டர் ஆன லோவல் தவான் என்பவரை நடிகை ரம்யா பாண்டியன் சில மாதங்களாக ரகசியமாக காதலித்து அவருடன் லிவிங் லைப் வாழ்ந்து வந்திருக்கிறார். இதனிடையே பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நடந்தது. 


இந்நிலையில் இதில் பல்வேறு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். இந்நிலையில் கணவருடன் ஹனிமூன் சென்றுள்ள ரம்யா பாண்டியன் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். புதுமண தம்பதிகளாக ரம்யா பாண்டியனும் அவரது கணவர் லோவல் தவானும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். 


அப்போது நடிகர் சூரி சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்துள்ளார். அவருடன் கதைத்து விட்டு புகைப்படங்கள் எடுத்து கொண்டனர் வெளியாக இருக்கும் விடுதலை 2 திரைப்படத்தின் வெற்றிக்காக வேண்டுதல் செய்யவே சூரி சென்றுள்ளார். இந்நிலையில் ரம்யா பாண்டியன் தம்பதியினருக்கு திருமண வாழ்த்தும் கூறிச்சென்றார் நடிகர் சூரி. 


Advertisement

Advertisement