• Dec 06 2024

படத்திற்கு ஆசிட் ஊற்றுவது விமர்சனங்கள்! இதை தடுக்க வேண்டும்! வசந்த பாலன் கோரிக்கை!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியாகியா நாளில் இருந்து எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் நல்ல வசூல் பெற்று வந்தநிலையில் தற்போது  பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் திணறி வருகிறது. 


பார்த்த ரசிகர்கள் பலர் நல்லவிதமாக கூறினாலும் ஒரு சிலர் படத்தினை மட்டமாக விமர்சித்து உள்ளனர். முக்கியமாக, பிரபல திரைப்பட விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் நேர்காணலில், "நான் கடந்த 44 ஆண்டுகளாக திரைப்பட விநியோகஸ்தர் தொழிலில் இருக்கிறேன். எனக்குப் பிடிக்காத படத்தின் 100-வது நாள் வெற்றியை நானே நடத்தியிருக்கிறேன்.


படம் நன்றாக இருக்கிறது என சொல்லிச் சொல்லியே பெரிய வெற்றியைப் பெற்றன. இன்று பக்கத்து மாநிலத்திற்குச் சென்று அதிகாலைக் காட்சியில் படம் பார்த்துவிட்டு விமர்சனம் என்கிற பெயரில் வாய்க்கு வந்ததை யூடியூபர்கள் பேசுகின்றனர்.


இதனால், சினிமா தொழிலே நாசமாகப் போகிறது. இந்தியன்-2, வேட்டையன், கங்குவா படங்களின் வசூல் குறைந்ததற்கு இந்த விமர்சனங்களே காரணம். படம் வெளியாகி இரண்டு வாரங்கள் வரை விமர்சனங்கள் வரக்கூடாது என்கிற தடை உத்தரவை வாங்க தயாரிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரைப்பட விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருந்தார்.


இந்நிலையில் இது பத்திரிகை ஒன்றில் வெளியாகவே அதனை எடுத்து தனது fb பக்கத்தில் பகிர்ந்த இயக்குனர் வசந்த பாலன் " தயாரிப்பாளர்கள் சங்கம் விமர்சனங்கள் விஷயத்தில் விரைவில் முடிவெடுக்கவேண்டும். ஆசிட் ஊற்றுவது போல வருகிற விமர்சனங்கள் ஒரு வாரம் வரை இணையதளங்களில் வரவிடாமல் தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என குறிப்பிட்டுள்ளார். 





Advertisement

Advertisement