‘சீதா ராமம்’ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம்பிடித்த நடிகை மிருணாள் தாகூர், தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இயல்பான நடிப்பு, எளிமையான அழகு மற்றும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற விதமான வெளிப்பாடுகள் ஆகியவை அவரை இளம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக்கியுள்ளன.
மிருணாள் தாகூர், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா எனப் பல மொழிகளில் நடித்துள்ளார். குறிப்பாக ‘சீதா ராமம்’ திரைப்படத்தில் சீதா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய நுணுக்கமான நடிப்பு, ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஒரே நேரத்தில் கவர்ந்தது.

இந்தப் படத்திற்கு பிறகு, மிருணாள் தாகூரின் ரசிகர் வட்டம் பல மடங்கு அதிகரித்தது. அவருடைய ஒவ்வொரு புதிய அப்டேட்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் மிருணாள் தாகூரும் ஒருவர்.
மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திரைப்பட அப்டேட்கள் மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கைத் தருணங்கள், பயண அனுபவங்கள், ஃபிட்னஸ், ஃபேஷன் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது அவர் தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
Listen News!