மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், இந்திய சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவருமான மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி இன்று காலமானார். அவருக்கு வயது 90. இந்த செய்தி, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளியான தகவல்களின் படி, சாந்தகுமாரி கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். குறிப்பாக, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், இன்று எளமக்கரையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அவரது மறைவு குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், மோகன்லாலை விரும்பும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
அத்துடன், சாந்தகுமாரியின் மறைவு செய்தி வெளியான உடனே, மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!