முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் விஜய் சேதுபதி, தனது இயல்பான நடிப்பு, எளிமை மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களும், விமர்சனங்களும் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து, சூர்யா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், தன்னை தொடர்ந்து ட்ரோல் செய்வது குறித்தும், அதனை அவர் எப்படி மனதளவில் எதிர்கொள்கிறார் என்பதையும் மிகவும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
சூர்யா அதில், “என்ன பண்ணாலும் Troll பண்ணத் தான் செய்யுறாங்க. எந்தப் பக்கம் திரும்பினாலும் அடிச்சுகிட்டே இருக்காங்க. ஆனா ஒரு கட்டத்தில அது எனக்கு பழகிடுச்சு.
ஒரு வேளை நான் IT கம்பெனில வேலைக்குப் போயிருந்தாலும், அங்க ஒரு நாலு பேர் என்னை பத்தி பின்னாடி பேசிக்கிட்டே தான் இருப்பாங்க. ஆனா இங்க சோசியல் மீடியா இருக்கிறதால சத்தம் அதிகமா கேட்குது. அதைப் பத்தி நான் நினைச்சால், என் நல்ல விஷயங்களைப் பற்றி யோசிக்காம போயிடுவேன்.” என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்த கருத்துகள், சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் எதிர்கொள்ளும் அழுத்தம், விமர்சனங்கள் மற்றும் ட்ரோலிங் குறித்து விளக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!