• Jan 18 2025

நடிகை மாதுரி வாழ்க்கையில் நடந்த துயரம்... தனியாக வாழ்ந்து வர என்ன காரணம் தெரியுமா... இதோ பலருக்கும் தெரியாத விஷயங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 04மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மாதுரி. அதுமட்டுமல்லாது இவர் பார்ப்பதற்கு ரொம்ப சிம்பிளாகவும், அழகாகவும் இருப்பதனால் நிறைய குடும்பப் பாங்கான செண்டிமெண்ட் கதைகளில் அதிகம் நடித்திருக்கின்றார். இந்நிலையில் இவர் குறித்த பலரும் அறிந்திடாத பல விடயங்கள் குறித்துப் பார்ப்போம்.

நடிகை மாதுரியின் முழுப்பெயர் மாதுரி தேவி. இவர் 1967- ஆம் ஆண்டு சென்னையில் பிறந்திருக்கின்றார். இவரின் தாய் மொழி என தமிழ், தெலுங்கு இரண்டையும் கூறலாம். ஏனெனில் இவரின் அப்பா, அம்மா தமிழ், தெலுங்கு இரண்டையும் சேர்ந்தவங்க. 

இவரின் சகோதரியான சித்ரா மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். அவரின் முழுப்பெயர் சக்தி சித்ரா. மாதிரிக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது அலாதி பிரியம். இதனையடுத்து இவரின் அப்பா, அம்மா டான்ஸ் ஸ்கூல் ஒன்றில் சேர்த்து விட்டார்கள்.


இவர் படித்து முடித்துவிட்டு ஓய்வில் இருக்கும் நேரங்களில் தனது அக்கா சித்ராவுடன் சூட்டிங் ஸ்பாட்டுக்கு போவார். அவ்வாறு சென்றபோது தான் நிறைய பேரின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. இந்நிலையில் தனது 15-ஆவது வயதில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பை அவங்க பயன்படுத்திக் கிட்டாங்க. இதனால் படிப்பையும் தூக்கிப் போட்டிற்றாங்க.

அந்தவகையில் இவருக்கு முதன்முறையாக 1984-ஆம் ஆண்டு 'பாவம் க்ரூடன்' என்ற மலையாள படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தினால் அந்தக் காலத்தில் பல சர்ச்சைகள் எழுந்தாலும் இப்படம் ரொம்ப நல்லாவே ஓடிச்சு.

இப்படத்தினை தமிழிலும் டாப் பண்ணினார்கள். அதாவது  'பாவம் கொடூரன்' என்ற தலைப்பில் தமிழ் நாட்டிலும் ஓடியது. பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தார். அதிலும் குறிப்பாக ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் அதிகம் நடித்திருந்தாலும் பின்னர் போகப் போக தமிழ் திரைப்படங்களில் தான் அதிகம் நடித்தார்.


இவ்விரு முன்னணி நடிகையாக நடிக்க ஆரம்பித்த மாதுரி அவர்கள் போகப்போக சப்போர்டிங் அக்ட்ரேஸ் ஆக நடிக்கத் தொடங்கினார். அந்தவகையில் விசுவின் மகளாகவும், ரஜினியின் தங்கையாகவும் பல படங்களில் நடித்திருக்கின்றார். இவர் நடித்த கடைசித் தமிழ்த் திரைப்படம் 'உயர்ந்தவன்'.

இவ்வாறு சினிமாவில் படு பிசியாக நடித்து வந்த இவர் அரவிந்த் என்பவரைத் திருமணம் பண்ணி குடும்ப வாழ்க்கையை கவனிக்கும் நோக்கில் சினிமாவில் இருந்தும் விலகினார். அதுமட்டுமல்லாது சினிமா சார்ந்த நிகழ்வுகள், பேட்டிகள் எதிலுமே கலந்து கொள்வதில்லை.

இதனால் இவர் இப்போ எப்படி இருக்கிறார்..? என்ன செய்கிறார்..? என்பது குறித்த தகவல் இதுவரை யாருக்குமே தெரியாது. மேலும் இவருக்கு குழந்தைகள் எதுவும் கிடையாது. அத்தோடு கணவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரையும் பிரிந்து தற்போது தனியாக மட்டுமே வாழ்ந்து வருகின்றார்.

தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக சினிமா மற்றும் சினிமா சார்ந்த நிகழ்வுகள் எதுவுமே வேணாம் என்று தனியாகவே இன்றுவரை வாழ்ந்து வருகின்றார் நடிகை மாதுரி.

Advertisement

Advertisement