• Jan 18 2025

தாய் மற்றும் அக்காவின் இறப்பு, நண்பருடன் திருமணம் – சின்னத்தம்பி நடிகையின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா.?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

80’s காலகட்டங்களில் கிளாமர் நடிகையாக வலம் வந்தவர் தான் அனுஜா ரெட்டி .இவர் படங்களில் சிறிய பகுதிகளை வந்திருந்தாலும் அந்த காட்சிகள் நம் மனதில் அப்படியே பதியும்படி நடித்திருப்பார். எனினும் இதுபோன்று இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் 200 படங்கள் நடித்திருக்கிறார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணிக்கு மனைவியாக வருவபவர் தான் அனுஜா ரெட்டி. 

எனினும் அந்த படத்தில் கவுண்டமணி ஆறு மணிக்கு மேல் கண்ணு தெரியாது அப்போது அவரின் மனைவியாக இவர் நடித்திருக்கும் காட்சிகள் இன்றும் பலரல் பேசப்படும். எனினும் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு இன்டர்வியூ கொடுத்த அனுஜா பேசியதை பார்க்கலாம்.

அனஜா ரெட்டி ஆந்திராவில் குண்டூர் என்ற இடத்தில் பிறந்தவர். அதன் பின்பு தன்னுடைய மூன்று வயதில் சென்னைக்கு குடி பெயர்ந்து வந்து விட்டார். அப்போது சென்னையில் அவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு மலையாள படத்திற்கு 3வது கதாநாயகியாக தேவைப்பட்டதால் இவரை பார்த்தவுடன் பேசி அந்த படத்திற்கு நடிக்க கூட்டு சென்று விட்டார்களாம். எனினும்  அந்த படத்தில் முதல் ஹீரோயினும் இரண்டாவது கதாநாயகிக்கும் எனக்கும் சண்டை ஏற்பட்ட காரணத்தால் முதல் கதாநாயகி  படத்தில் இருந்து விலகி சென்று விட்டார். அதன் பின்பு இவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது இப்படி தான் திரைப்படத் துறைக்குள் வந்தார் அனுஜா ரெட்டி .


அத்தோடு அனுஜா ரெட்டியின் குடும்பத்தை பற்றி நிகழ்ச்சி தொகுப்பாளர் விசாரித்த பொழுது உடன் பிறந்தவர்கள் 2 அண்ணன்கள் ஒரு அக்கா நான் தான் கடைசி பிறந்த பெண் என்றும் கூறினார். அநற்கு பின் கண் கலங்கி கொண்டே கடந்த இரண்டு வருடங்களில் தன்னுடைய அம்மாவும் அக்கா தவறிவிட்டதாகவும் சமீபத்தில் தான் தனது ஒரு அண்ணனும் தவறிவிட்டார் என்றும் கண்கலங்கியபடியே அனுஜா ரெட்டி தன் குடும்பத்தை பற்றி  தெரிவித்தார். இதன் பின்பு தன் அண்ணனின் நண்பரே திருமணம் செய்து கொண்டதாகவும். தன் கனவர் தற்பொழுது பிசினஸ் செய்வதாகவும். இப்போது தனக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறான் என்றும் தனது குடும்பம் பற்றி அனுஜாரிட்டி  தெரிவித்தார்.

 தொகுப்பாளர் அன்ஜா ரெட்டியிடம் படங்களில் நடிப்பதற்கு உங்களிடம் அட்ஜெட்மென்ட் கேட்டுள்ளார்களா என தொகுப்பாளர் கேட்க . எனினும் அதற்கு பதில் அளித்த அனுஜா ரெட்டி என்னிடம் இதுவரை யாரும் அப்படி கேட்டதில்லை அதற்கு முதல் நம் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். நாம் அவர்களுக்கு நம்மிடம் அந்த எண்ணம் ஏற்படும்படி நடந்து கொள்ளாமல் இருந்தாலே இதுபோல் இந்த அசம்பாவிதங்களும் நடக்காது என்றும் இப்போதெல்லாம் சினிமாவில் வளர்வதற்காக ஆசைப்பட்டு அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கிறார்கள் பின்பு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற நேரத்தில் அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டு விட்டார் எனவும் வெளியில் வந்து பேசுகிறார்கள் என உண்மையை போட்டு உடைத்தார்.

அத்தோடு நீங்க எப்படி கிளாமர் ஆக நடிக்க வந்தீர்கள் என்ற தொகுப்பாளர் கேட்க. அனுஜா நான் ஆசைப்பட்டு ஒன்னும் இந்த துறையை தேர்ந்தெடுக்கவில்லை. முதலில் நான் நடன கலைஞராக சினிமாவில் பணியாற்றிக் கொண்டே இருந்தேன் பின் நிறுத்திவிட்டு மறுபடியும் கேரக்டராக நடிக்க வந்தேன் அப்பொழுது கிளாமராக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட பொழுது நான் மனமில்லாமல் நடித்தேன் பின் படங்கள் ஹிட்டாக ஆரம்பித்தவுடன் எனக்கு மிகவும் பிடித்தது. மேலும் இப்படி தான் கிளாமராக நடிக்க வந்தேன் மேலும் நாம் ந நடனமாடும் போது கிளாமர் நடனம் என்றால் ஹீரோயின் போட்டிருக்கும் அதை உடைய தான் நானும் போட்டிருப்பேன். நடிக்க வந்த பிறகு அதேபோன்று உடை அணித்து கொள்கிறேன் ஆனால் நான் முன்னாடி இருக்கிறேன் அவ்வளவுதான் வித்தியாசம் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement